Myturn-கற்றவர்கள் மற்றும் பயிற்சிகள் பற்றிய ஒரு கதை

சில வருடங்களாக தங்கள் கல்விப் பணிகளில் இருந்து (Theoretical) கோட்பாட்டு அறிவைப் பெறும் மாணவர்கள், தங்கள் கல்விப் பயணத்தின் கடைசி அல்லது கடைசி இரண்டு ஆண்டுகளில் தாங்கள் படிக்கும் பாடம் தொடர்பான நடைமுறை மற்றும் தொழில்நுட்ப அறிவைப் பெறுவதில் கவனம் செலுத்துகிறார்கள். இது  தான்  அவர்களின் internship என்று அழைக்கப்படுகிறது.  பெரும்பாலும் படிப்பின் இறுதி ஆண்டுகளில், மாணவர்கள் தங்கள் கல்விப் பயணத்தின் மூலம் அவர்கள் பெற்ற பாட அறிவு தொடர்பான   நடைமுறைப் பயிற்சியைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இது தவிர, மேம்பட்ட தொழில்நுட்ப டிப்ளோமாக்கள், உயர் டிப்ளோமாக்கள், டிப்ளோமாக்கள் அல்லது குறிப்பிட்ட பாடப் பகுதி தொடர்பான சான்றிதழ் படிப்புகளைப் படித்த பிறகு, தங்களுக்குத் தேவையான corporate நடைமுறைப் பயிற்சியைப் பெறுவார்கள் என்று எதிர்பார்ப்பவர்களும் உள்ளனர். எனவே, அவர்கள் அனைவருக்கும் corporate நடைமுறை பயிற்சி பெறுவதற்கு internship முக்கிய வழிகளில் ஒன்றாகும்.

Internship கண்டுபிடிப்பதில் உள்ள சிரமத்தை தற்போது நாம் காணும் ஒரு பெரிய பிரச்சனையாகக் குறிப்பிடலாம். இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். ஆனால், அடையாளப்படுத்தப்பட்ட சிக்கல்கள் 2 காணப்படுகிறது. முதல் விடயமாக இலங்கையின் பொருளாதார நெருக்கடியால் சில துறைகள் வீழ்ச்சியடைந்துள்ளதாகக் கூறலாம். எனவே, இதேபோன்ற வீழ்ச்சியடைந்துள்ளதுறையில் முதலவது பட்டத்தைப் பெற்ற   ஒருவக்கு internship எடுப்பதற்கு நிச்சயமற்றதாக இருக்கலாம். இரண்டாவதாக, சில துறைகளில் போதுமான internship உள்ளன. என்றாலும் சரியான தொடர்பு இல்லாததால், மாணவர்கள் அவற்றைப் பற்றி அறியவில்லை என்பதைக் குறிப்பிடலாம். இதுபோன்ற சமயங்களில், அவர்களின் நோக்கத்துக்கு ஏற்ற internshipபை எளிதில் கண்டுபிடிக்க முடியாமல், முறையான பயிற்சி பெற முடியாமல் தவிக்கின்றனர்.

மேலும், internshipபைக் கண்டுபிடிப்பதில் ஏற்படும் தாமதம், பயிற்சிக்காக அவர்கள் வைத்திருக்கும் மதிப்புமிக்க நேரத்தை வீணடிக்கிறது. மேலும், internship இல்லாதது அல்லது அதைக் கண்டுபிடிப்பதில், சிரமம் ஆகியவை மாணவர்களுக்கு மனச்சோர்வு, போன்ற மனநலப் பிரச்சினைகளை வளர்ப்பதற்கான வலுவான காரணங்களில் ஒன்றாகும்.

மறுபுறம், சில நிறுவனங்கள் (பொது மற்றும் தனியார்) தங்களுக்குத் தேவையான பயிற்சி பெற்ற, தரமான தொழிலாளர்களைக் கொண்ட இடங்களைக் கண்டுபிடிக்க முடியாது உள்ளன. தகுந்த மனித வளங்களைக் கண்டுபிடிக்க அவர்களhல் தேவையற்ற நேரத்தையும் வளங்களையும் செலவழிக்க வேண்டும். விசேடமாக, சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (SME)  அடுத்த பாச்சலுக்கு தேவையான தரமான உழைப்பு இல்லாமல் உள்ளது.

எனவே, இவ்வாறான பயிற்சிகள் தொடர்பான பிரச்சனைகள் பற்றிய கலந்துரையாடலின் அடிப்படையில், கலாநிதி நதீஷா சந்திரசேனவின் கருத்தின்படி இந்த MyturnPlatform உருவாக்கம் ஆரம்பிக்கப்பட்டது. Myturn என்பது ஒரு தன்னார்வ சேவையாகும், இது பணம் செலுத்தும் internshipகளை வழங்கும் corporateகளையும் internship பெற விரும்பும் நபர்களையும் இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதுவரை, பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்கள் ஒரு குழு MyturnPlatform உருவாக்குவதில் ஈடுபட்டுள்ளனர். தற்போது, திட்ட கண்காணிப்பு குழு, தொழில்நுட்பக் குழு, தகவல் தொடர்பு மற்றும் மக்கள் தொடர்புக் குழு, மனித வளக் குழு மற்றும் சட்டக் குழு ஆகிய ஐந்து (05) பிரிவுகளில் முப்பது (30)க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் தங்கள் தொழில்முறை அறிவை Myturn க்குத் தன்னார்வத் தொண்டு செய்து வருகின்றனர். மேலும், Myturn தளத்தை உருவாக்கும் போது, Sanmark Solutions அவர்கள் மூலம் Myturn app மற்றும் Myturn இணையதளத்தை இலவசமாக உருவாக்கும் வாய்ப்பை வழங்க முன் வந்துள்ளது.

எதிர்காலத்தில், அனைத்து சமூக ஊடக வலையமைப்புகள் ஊடாகவும் Myturn பற்றிய விழிப்புணர்வு செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு நாங்கள் எதிர்பார்த்துள்ளோம். அதேபோல், எங்கள் blog site, மூலம் Myturn Platform எவ்வாறு பதிவு செய்வது, Myturn மூலம் internshipபை எவ்வாறு வழங்குவது மற்றும் பெறுவது, internship தொடர்பான பிரச்சனையின் போது எவ்வாறு ஆதரவைப் பெறுவது, அத்துடன் internship தொடர்பான அங்கவீனமுற்ற சமூகத்தின் தேவைகள் பற்றி அறியமுடியும்

விசேடமாக கூறினால் Myturn என்பது பட்டதாரிகள், உயர் டிப்ளமோ மற்றும் டிப்ளோமா வைத்திருப்பவர்கள், சான்றிதழ் வைத்திருப்பவர்கள் மற்றும் internshipபைப் பெற எதிர்பார்க்கும் அனைவருக்கும் ஒரு திறந்த Platform ஆகும். எனவே, Myturn  பற்றிய சமீபத்திய தகவல்களை அறிய எங்களுடன் இணைந்திருங்கள்.

முக்கிய வார்த்தைகள்: internship Myturn Platform, Corporate நடைமுறை பயிற்சி, விழிப்புணர்வு நடவடிக்கைகள், internshipபை கண்டுபிடிப்பதில் உள்ள சவால்கள்.

லீலாநாத் விக்கிரமாராச்சியால்


Comments

“Myturn-கற்றவர்கள் மற்றும் பயிற்சிகள் பற்றிய ஒரு கதை” அதற்கு 0 மறுமொழிகள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன