சனிக்கிழமை காலை ITN ன் ப்ரோக்ராமுக்குப் போய்விட்டு பிக்மே டக்கில் வந்தேன். சாரதி 55 வயதுடையவர். ஒரு வேளை நான் ITNல இருந்து tuk ஏறினதால அவர் என்னை “Miss, நீங்களும்ம் ITNல வேலை செய்கிறீர்களா?” “இல்லை, நான் ஒரு ப்ரோக்ராம் போயிருந்தேன்,” நான் அவருக்கு ஒரு சிறிய பதிலைக் கொடுத்தேன். “புரோகிராம் எப்போ ஒளிபரப்பாகும் மிஸ்?”, இன்று நேரலையில் இருந்தது. இன்று ஒளிபரப்பப்பட்டது.”
மீண்டும் ஒரு கேல்வி, திட்டம் என்றால் என்ன? அரசியல் ஒன்றா?”
“இல்லை. இது கேம்பஸ் படிப்பை முடிக்கவிருக்கும் குழந்தைகளுக்கு வேலை தேடும் திட்டம்” என்று நான் வெறுமனே பதிலளித்தேன்.
“அதைப் பத்தி பேசுறது நல்ல விஷயம்தான். இப்போ பிள்ளைகளுக்கு வேலை கிடைக்கிறதுல ரொம்பப் பிரச்னை. என் மகனும் பேராதனை கேம்பஸ்ல இருக்கான். அவங்களுக்கு அந்த கேம்பஸ்ல இருக்கும்போதே மாசம் ட்ரெயினிங்… அது… இது. ..” என்றார். என்னிடம் சொன்னதும் “இன்டர்ன்ஷிப்தானே?” என்று கேட்டேன்.
“ஆமாம் ஆமா.நம்ம பிள்ளைகளுக்கு அந்த இன்டர்ன்ஷிப்பைக் கண்டுபிடிக்கறது ரொம்ப கஷ்டமா இருந்தது.” அவர் சொன்னார்.
நாங்கள் அனைவரும் கடந்த காலமாக இன்டர்ன்ஷிப் பிரச்சினைகள் பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறோம், எனவே தற்போது இலங்கையில் இன்டர்ன்ஷிப்பைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினம் என்பதைப் புரிந்துகொண்டோம்,
எனவே நான் யூகித்து கேட்டேன், “உங்கள் மகன் சிவில் இன்ஜினியரிங் ஆ?. .”
“ஆமாம் மிஸ். அவனுக்கு ஒரு இன்டர்ன்ஷிப் கிடைத்தது, ஆனால் அவனது நண்பர்கள் சிரமப்பட்டனர். அந்தக் பிள்ளைகள் இன்னும் பயிற்சிக்கு சென்றார்களா என்று எனக்குத் தெரியவில்லை.”
நான் அவரிடம், “சரியாகச் சொல்வதென்றால், இன்டர்ன்ஷிப்களைக் கண்டுபிடிப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துகிறோம். இன்டர்ன்ஷிப் தேடும் மாணவர்களையும், இன்டர்ன்ஷிப் வழங்கும் நிறுவனங்களையும் இணைக்க இந்த வேலையைச் செய்கிறோம்.”
“அது நல்ல வேலை. எங்கள் குழந்தைகளுக்கு இது பற்றி தெரியாது என்று நினைக்கிறேன்.” அவர் சொன்னார்.
“நாங்கள் இன்னும் நீண்ட நாட்களாக இந்தப் பணியைத் தொடங்கவில்லை. இன்னும் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளோம்” என்று பதிலளித்தேன்.
“இப்படி பண்ணலாம், கேம்பஸ்ல பசங்கள் ட்ரெயினிங் தேடுற காலமும் இருக்கு. அந்த நேரத்தில் கம்பெனிகள் அவங்களுக்கு போன் செய்து தகவல் சொல்லுவார்கள். உங்கள் ப்ரோக்ரம் பத்தியும் அப்படி தகவல் வழங்கினால் நல்லம்.”
அந்த நேரத்தில் என்னுடன் டக் சாரதியாகப் பேசியவரிடம், தன் மகன் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் படிப்பதாகச் சொன்ன தந்தையிடம், இந்தப் பிரச்சனையைப் பற்றி நன்றாகப் புரிந்துகொண்டிருப்பார் என்று நினைத்தென், நான் இறங்கும் வரை தொடர்ந்து பேசினேன்.
ITN இலிருந்து மஹரகம வரை, இன்டர்ன்ஷிப்களைக் கண்டுபிடிப்பதில் உள்ள சிரமத்தால் குழந்தைகள் எதிர்கொள்ளும் சில பிரச்சினைகள், குழந்தைகளின் ஆங்கிலத்தை மேம்படுத்த வேண்டிய அவசியம், இலங்கையில் சில துறைகளின் வீழ்ச்சி, சிறிய நிறுவனங்களில் உள்ள வாய்ப்புகள், ITN இலிருந்து மஹரகம வரும்போது பேசினோம். மகனின் நண்பர்கள் எப்படி மைடர்னுடன் சேரலாம் என்ற விவரமும் அவருக்கு கிடைத்தது.
இது மிகவும் தற்செயலான ஆனால் உண்மை சம்பவம். அவருடன் பேசியதில் இருந்து நான் புரிந்து கொண்டது என்னவென்றால், விஷயங்கள் எப்படி நடக்க வேண்டும், என்பது பற்றிய புரிதல் மக்களுக்கு இருக்கிறது. ஒருவேளை எதையாவது செயல்படுத்த யாரும் இல்லை. இலங்கையில் உள்ள அனைத்தையும் ஒரேயடியாக மாற்ற முடியாது. ஆனால் இலங்கையின் ஒரு பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு Myturn அடித்தளம் அமைத்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் கூற முடியும்.

Translated by Selwanadhan Miththiya


மறுமொழி இடவும்